happy gif Webpages of Tamil Electronic Library © K. Kalyanasundaram



Compositions of the Tamil Poet Subramania Bharathiyar
(in Tamil script, unicode format)





Subramanya Bharathi (December 11, 1882 - September 11, 1921) better known as Mahakavi Bharathiar (Maha Kavi meaning Great Poet) in Tamil, is deemed one of the greatest poets of India. A prolific writer, philosopher and a great visionary of immense genius and perspicacity, Bharathiar was also one of the most prominent leaders of the Indian independence movement in South India.

Born on December 11, 1882 in the Tamil village of Ettayapuram, Bharathi was educated at a local high school called "Nellai Hindu School" where his talents as a poet were recognized even at the age of 11. He married Chellamal in 1897. After an early marriage, Bharathi, curious to see the outside world, left for Kashi in 1898. The next four years of his life served as a passage of discovery, when Bharathy discovered a country in tumult outside his small hamlet.

He had an exceptional love and devotion towards his mother tongue Tamil language, which he considered as the sweetest of all the languages known to him. He was fluent in many languages including Bengali, Hindi, Sanskrit, Kutchi, French and English and frequently translated works from other languages into Tamil. He had a voracious appetite for learning ancient and contemporary Tamil literature and had a gifted intellect to derive astonishing truths from ancient poems.

Immersing himself in Hindu spirituality and nationalism, Bharathi returned to his Southern home, an iconoclast who shattered without hesitation, every meaningless social taboo and rule that held sway amidst the orthodox South Indians. By the early 1900s, Bharathi had become completely involved in the nationalist movement and took active part in the Congress meets through out the country.



This webpage contains parts of the page in Tamil script but in Unicode encoding .


சுப்ரமணிய பாரதியார் (1882 - 1921) பாடல்கள்


தெய்வப் பாடல்கள்

1. ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

கணபதி ராயன்- அவனிரு
காலைப் பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே - விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி..) 1
சொல்லுக் கிடங்காவே - பரா சக்தி
சூரத் தனங்க ளொல்லாம்,
வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
வாழி யென்றே துதிப்போம் (ஓம் சக்தி..) 2
வெற்றி வடிவேலன் -அவனுடைய
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ, பகையே,
துள்ளி வருவது வேல். (ஓம் சக்தி..) 3
தாமரைப் பூவனிலே -சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்,
பூமணத் தாளினையே -கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம் (ஓம் சக்தி..) 4
பாம்பைத் தலைமேலே நடஞ்செயும்
பாதத்தினைப் புகழ்வோம்
மாம்பழ வாயினிலே - குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்
செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்,
செல்வ மெல்லாந் தருவாள் -நம தொளி
திக்க னைத்தும் பரவும்
- - -- - - - - - - - - - - - - - - - - - - - -
2. வெள்ளைத் தாமரை
(ராகம் ஆனந்த பைரவி, தாளம் சாப்பு)

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்,
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள்,
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள் (வெள்ளைத்) 1

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழழையில் உள்ளாள்,
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவுச் சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள் (வெள்ளைத்) 2

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்,
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 3

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்,
உய்வ மென்ற கருத்திடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்,
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,
வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழியஃதிங் கௌiதன்று கண்டீர்,
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தினத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம் இவள் பூசளை யன்றாம். (வெள்ளைத்) 5

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுத மென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர். (வெள்ளைத்) 6

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறுநாடு,
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க. (வெள்ளைத்) 7

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் என்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர் (வெள்ளைத்) 8

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்) 9

நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்,
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர். (வெள்ளைத்) 10
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --
3. திருமகள் துதி
(ராகம் சக்கர வாகம், தாளம் திஸ்ர ஏகம்)

நித்தமுனை வேண்டி மனம் நினைப்ப நீயாய்ப்
பித்தனைப் போல் வாழ்வதிலே பெருமையுண்டோ? திருவே
சித்தவுருதி கொண்டிருந்தார் செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே உயர்ந்த வேத முரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ? சுடர் மணியே, திருவே
மெத்த மையல் கொண்டு விட்டேன் மேவிடுவாய், திருவே 1

உன்னையன்றி இன்ப முண்டோ உலகமிசை வேறே?
பொன்னை வடிவென் றுடையாய் புத்தமுமே திருவே
மின்னொளி தருநன் மணிகள் மேடை யுயர்ந்த் மாளிகைகள்
வண்ண முடைய தாமரைப் பூ மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்னம் நறுநெய் பாலும் அதிசயமாத் தருவாய்,
நின்னதருளை வாழ்த்தி என்றும் நிலைத்திருப்பேன், திருவே 2

ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரிய
வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்,
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ? எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண்டிரங்கா மழையினைப் போல் உள்ள முண்டோ?
நாடு மணிச் செல்வமெல்லாம் நன்கருள்வாய், திருவே,
பீடுடைய வான் பொருளே, பெருங்களியே திருவே. 3
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
4. அச்சமில்லை
(பண்டாரப் பாட்டு)

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
5. மனத்தில் உறுதி வேண்டும்

மனதி லிறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும், ஓம் ஓம் ஓம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
6. அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்ற தெய்வமுன் டாமெனல் கேளிரோ? 1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி மயக்கும் மதியிலிகாள் - எத
னூடும் நின்றோங்கும் அறிவொன்ற தெய்வமுன் றோதி யறியீரோ? 2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளிரோ? பல
பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ? 3
வேடம்பல் கோடியோர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் வேத மறியாதே 4
நாமம்பல் கோடியார் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந் நான்மறை கண்டிலதே 5
போந்த நிலைகள் பலவணும் நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று சான்றவர் கண்டனரே 6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று காட்டும் மறைகளெல்லாம்- நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு அவங்கள் புரிவீரோ?
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்கு
கொள்ளக் கரிய பரிமமென் றேமறை கூவுதல் கேளீரோ?
மௌfளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மரை காட்டவும் வல்லீரோ?
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனும் வேதமெல்லாம் - என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன் உணர்வெனக் கொள்வாயே 10
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
7. நான்
(இரைட்டைக் குறள் வெண் செந்துரை)

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
கானில் வளரும் மரமலொம் நான். 1
காற்றும் புனலும் கடலுமே நான்,
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான். 2
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவமெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4
மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5
அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டபல சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான். 6
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்,
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான். 7
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
8. முருகா, முருகா
(ராகம் நாட்டைக் குறிஞ்சி, தாளம் ஆதி)

பல்லவி
முருகா, முருகா, முருகா
சரணங்கள்

வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்,
தருவாய் நலமும் தகவும் பூகமும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா) 1
அடியார் பலரிங் குளரே,
அவரை விடுவித் தருள்வாய்,
முடியா மறையின் முடிவே, அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே (முருகா) 2

சுருதிப் பொருளே, வருக
துணிவே, கனலே வருக வருக
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல் (முருகா) 3

அமரா வதி வாழ் வுறவே
அருள்வாய், சரணம், சரணம்,
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமறும் சுடர்வே லவனே, சரணம் (முருகா) 4

அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய், அடியார்
புதுவாழ் வுறவே புவிமே தருள்வாய் (முருகா) 5

குருவே, பரமன் மகனே,
குகையில் வளருங் கனலே,
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே, சரணம் சரணம். (முருகா) 6
- - - - - - - - - - - - - - - - - - - -- - -
9. கண்ணம்மாவின் காதல்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் -நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன் னொத்தநின் மேனிய
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே - இந்தக் (காற்று)

நீயென தின்னுயிர் கண்ணம்மா - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே - இந்தக் (காற்று) 2
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
10. கண்ண பெருமானே

காயிலே புளிப்ப்தென்னே? கண்ண பெருமானே,
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே,
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே,
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே
கனவிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே,
திக்கிலே தௌiந்நதென்னே? கண்ண பெருமானே,
ஏற்று நின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே,
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே,
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே.
- - - - - -- - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - -
11.. அம்மாக்கண்ணு பாட்டு

பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல மனந் திறப்பது மதியாலே,
பாட்டைத் திறப்பது பண்ணாலே -இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே - மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டையடிப்பது வில்லாலே - அன்புக்கோட்டை பிடிப்பது சொல்லாலே,
காற்றை யடைப்பது மனதாலே - இந்தக் காயத்தைக் காப்பது செய்கையிலே.
சோற்றைப் புசிப்பது வாயாலே - உயிர் துணி வுறுவது தாயாலே !
- - - - - - - - - -- - - - - - - - -- - - - - - - -- - - - - - - -

---


தேசிய கீதங்கள்

1. தாயின் மணிக்கொடி பாரீர்

பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் !

சரணம்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் 1

பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து கழற்றும் பெரும் புகற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதல் வறுதிகொள் மாணிக்கப் படலம் 2

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பக்குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் 4

அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ
பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர் 5

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக்கேபணி செய்திடு துளுவர் 6

கன்னடர் ஒட்டியரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவரக கொளப்ப - நிற்கும் பொய்புடையார் இந்துஸ்தானத்து மல்லர் 7

பூதலம் முற்றிடும் வரையும் - அறப்போர் விறல் யாவும் மறப்பறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்திர வீரர் 8

பஞ்ச நதத்ததுப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் 9

சேர்ந்தனைக் காப்பது காணீர் - அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்தேவி துவஜம் சிறப்புற வாழ்க 10

- - - - - - - - - - - - - - - - - - - -
2. நாட்டு வணக்கம்

எந்தைய
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் வாயுற வாழ்த்தேனோ? - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? 1

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளையாடி இல்போர்ந்த்தும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? 2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதுa\ட்டித் தழுவிய திந்நாடே மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ? 3
- - - - - - - - - - - - - - - - - - - -

3. வந்தே மாதரம்

பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே 1

ஈனப் பறையர்களேனும் - அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ - பிற தேசத்தார் போற்பல தீங்கிழைப் பாரோ 2

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முன் சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ 3

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் 4

எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் 5

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர -இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி 6
- - - - - - - - - - - - - - - - - -
4. பாரத நாடு

பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு -எங்கள்
பாரத நாடு

சரணங்கள்
ஞானத்திலே பரமோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர்நாடு -இந்தப் (பாருக்)
தீரத்திலே படை வீரத்திலே -நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு
தருவதிலே உயர்நாடு - இந்தப் (பாருக்)

நன்மையிலே உடல் வன்மையிலெ - செல்வப்
பன்மையிலே மறத்தன்மையிலே
பொன்மயிலொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினிலே உயா நாடு - இந்தப் (பாருக்)

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே -புயு
வீக்கத்திலே உயர் நோக்கத்திலே
காக்கக் திறல்கொண்டமல்லர் தம்சேனைக்
கடலினிலே உயர்நாடு - இந்தப் (பாருக்)

வண்மையிலே உளத்திண்மையிலெ - மனத்
தன்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர்நாடு - இந்தப் (பாருக்)

யாகத்திலே தவவேகத்திலே - தனி
யோகத்திலே பலபோகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
அருளினிலே உயர்நாடு -இந்தப் (பாருக்)

ஆற்றினிலே கனை யூற்றினிலே -தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடுங் காலி
இனத்தினிலே உயர்நாடு - இந்தப் (பாருக்)

தோட்டத்திலே மரக்கூட்டத்திலே - கனி
ஈட்டத்திலே பயிர் ஊட்டத்திலே
தேட்டத்திலே அடங் காத நிதியின்
சிறப்பணிலே உயர்நாடு - இந்தப் (பாருக்)
- - - - - - - - - - - - - - - - - - -- - - - - -- - - - - -----
5. பாரத தேசம்

பல்லவி
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார் துயர்ப் பகைகொல்லு வார்

சரணங்கள்
வெள்ளிப் பனிமலையில் மீதுலவு வோம், அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்,
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் எங்கள்
பாரத தேச மென்று தோள் கொட்டுவோம் (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர் பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே (பாரத)

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மாராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம் (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்
ராசபுரத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

பட்டினியில் ஆடையில் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்வோம் சாயுதல் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் வண்மைகள் செய்வோம் (பாரத)

குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் புறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானையளப் போம் கடல்மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தௌiவோம்
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப்போம் கொல்லருளை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல Yஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் (பாரத)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --
6. தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
தந்தையர் நாடென்று பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேணி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் -மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்கள்ம புட்பகம் சாவக் - மாகியு
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமம்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- - - - - - - - - - - - - - - - - --
7. வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக தீதெலாம் நலிக
அறம்வளரந் திடுக மறம்மடி வ
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக கோங்குக
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க
வந்தே மாதரம் வந்தே மாதரம்
- - - - - - - - -- - - - - - -
8. சுதந்திர தாகம்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் இந்த அடிமைகள் மோகம்?
என்றெம் தன்னகை விலங்குள் போகும்?
என்றெம் தன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்க வந் தோனே?
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே?
வென்றி தருந்தணை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் என்னும் வாடுதல் நன்றோ? 1

பஞ்சமும் நோயும் நின் மெய்ப்படி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்லென் றருள் செயுங் க்டமை யில்லாயோ?
ஆரிய நீயும் நின் அறம் மறந்தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே
வீர சிகாமணி ஆரியர் கோனே 2
- - - - - - - - - - - - - - -- --
9. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலாமுகத்தினாய் போ போ போ
பொறியிழந்த விழியினாய் போ போ போ
ஒளியழந்த குரலினாய் போ போ போ
ஒளியிழந்த மேனியாய் போ போ போ
கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 1

இன்று பராதத்திடை நாய் போலே
ஏற்றமின்றி வாழுவாய் போ போ போ
நன்றி கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணிலாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெல்லாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யலாம் பொய்யாக
விழிமயங்கி நோக்குவாய் போ போ போ 2

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிவாய் போ போ போ
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ 3

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாக போன்றனை போ போ போ

வருகின்ற பாரத்ததை வாழ்த்தல்
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தௌiவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா 5

மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா 6

இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலாவ லத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையிழந்த நாட்டிலே முன்போலே
கலைசிறந்த வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவைய
விழியினால் விளக்குவாய் வா வா வா 7

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழைமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குளுய்யவே நாடெல்லாம்
ஒருபெருஞ்செயல் செவ்வாய் வா வா வா 8
- - - - - - - - - - - - -
10. தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனியாவது எங்கும் காணோம்,
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும் 1

யாமரிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமெ பிறந்திலை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற்கோளிர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கம் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்
தௌfளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்
- - - - - --- - - - - - - - - - - -
11. எங்கள் நாடு

மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பறி திலையே
இன்னறு நீர்க்கங்கை யாரெங்கள் யாறே
இங்கிதன் மாண்பில் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நா லெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூ\ல் இதுபோலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே 1

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத காண நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பார நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே 2

இன்னல் வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரிவோம்
தாய்த்திருநாடெனில் இனிக்கையை விரியோம்.
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலயும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலை ஈடே 3
- - - - - - - - - - - - - - - - - - -

12. காணி நிலம்

ஆணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அந்கு
ஹுஒஒணில் அழகியதாய் - நந்மாடந்கள்
துய்ய நிறத்திநதாய் - அந்தக்
ஆணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கஃஇத் தரவேண்டும் - அந்கு
ஏணி யருகிநிலே - தெந்நைமரக்
கெஎற்று மிள நெஎரும்,

அத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர் போலே - நிலாவொளி
முந்பு வர வேணும் அந்கு,
அத்துந் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும் எந்றந்
ஹுஇத்தம் மகிழ்ந்திடவே - நந்றயிளந்த்
தெந்றல் வர வேணும்,

ஆஃஉக் கலந்திடவே - அந்கேயொரு
பத்திநிப் பெண் வேணும் - எந்கள்
ஒஒஃஉக் களியிநிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
ஆஃஉ வெளியிநிலே, - அம்மா நிந்றந்
காவலுற வேணும் - என்றன்
ஆஃஉத்திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.



Google
Web tamilelibrary.org

Ordering Tamil books
click here to see a list of Books of interest to Tamil Diaspora that you can order directly from.




Page visits to this site till date: