Official Prayer Hymn of Tamilnadu Govt – tamizttAi vAzttu

Posted By kalyan on April 19, 2008

tamizh tAi vAzhttu -1
(as recited in Tamilnadu public functions)

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராடும் கடலெடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்,
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில்,
தெக்கானமும் அதிர் சிறந்த திராவிட நல்திருநாடும்,
தக்க சிறுபிரை நுதலும் தரிந்த நறும் திலகமுமே,
அத்திலக வாசனை போல் அனைத்திலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்
தமிழணங்கே ! தமிழணங்கே!
உன் சீர் இளமை திறம்வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே !

Click here to listen to the song

tamizttai vAzttu

Original composition
தமிழ்த் தெய்வ வணக்கம்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடந்ல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே !

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா எழுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழிந்தே ஒன்றுப்ல ஆயிடினும்
சீரளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே !

- மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை
—-

tamizt tAi vAzttu -2

Here is another verse devoted to Tamil Goddess that my wife
recalls learning while she was in school. She does not remember
the author of this verse. If you do know who the author is,
please let me know so that I can give proper acknowledgment
here.

தமிழ்த்தாய் வாழ்த்து

செந்தமிழ்த் தாயே உன் சிந்தை குளிர எங்கள்
வந்தனை கொள்வாயம்மா தேவி (செந்)
நற்புலவர் கூடி சங்கம் வளர்த்த நாட்டில்
பற்பலரும் போற்ற பாங்காய் கொலுவிருக்கும் (செந்)

இயல் இசை நாடகமே நீயாகி நின்றாயே
இனிய நற் களியாகி இன்புற வைத்தாயே
நீ இந்த வையகத்தில் நின்று நிலைத்திடுவாய்
தாயும்மை பதம்பாடும் சேயெம்மை காப்பாயே (செந்)

நீலப் பெருங்கடலின் ஓசையில் நீ இருப்பாய்
நீ இன்றும் என்றுமே எங்களில் நிலைத்திருப்பாய்
காலப் பெருஞ் சுழலில் கலந்திருப்பாய் என்றும்
சாலப் பலலை வென்றே நின்றிடுவாயம்மாஅ (செந்)

பாண்டியன் பைங்கிளியாய் பவனி வந்தாண்டிட
சேரனும் சோழனும் சேர்ந்துனைப் போற்றிட
சுந்தரியே செல்வி சங்கத்தமிழ் பாடும்
செந்தமிழே, உன்னை உயிரெனப் போற்றுவோம் (செந்)
—-

About the author

kalyan

Comments

Leave a Reply

Please note: Comment moderation is currently enabled so there will be a delay between when you post your comment and when it shows up. Patience is a virtue; there is no need to re-submit your comment.

You must be logged in to post a comment.