A collection of Tamil proverbs

Posted By kalyan on April 19, 2008

தமிழ்ப் பழமொழிகள்

1. அகத்தின் அழகு முகத்திலே.
2. அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவார்களா ?
3. அமாவாசைச்சோறு என்றைக்கும் அகப்படுமா?
4. அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
5. அலை மோதும்போதே தலை முழுகு.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
6. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
7. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.
8. அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
9. அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்.
10. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

11. அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமும்.
12. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
13. அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?
14. அள்ளாது குறையாது, சொல்லாது பிறவாது.
15. அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
16. அலை எப்போது ஓயும் தலை எப்போது முழுகுவது?
17. அவனன்றி ஓர் அணுவும் நகர்வதில்லை
18. ஆகுங்காய் பிஞ்சிலே தெரியும்
19. ஆறின கஞ்சி பழங்கஞ்சி.
20. ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இராது.

21. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்.
22. ஆபத்துக்குப் பாவம் இல்லை
23. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
24. ஆனைக்கும் அடி சறுக்கும்.
25 ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
26. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
27. இக்கரைக்கு அக்கரை பச்சை.
28. இனம் இனத்தையே சாரும்.
29. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
30. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

31. ஈர நாவிற்கு எலும்பில்லை.
32. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?
33. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
34. உளவு இல்லாமல் களவு இல்லை.
35. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
36. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
37. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
38. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
39. எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
40. எத்தனை புடம் போட்டும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

41. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
42. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
43. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
44. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
45. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
46. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
47. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
48. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.
49. எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
50. ஏவுங்கிரவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்கு தலைச்சுமை.

51. ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
52. ஓருகாசு பேணின் இரு காசு தேறும்.
53. ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகுமா?
54. கடுகு போன இடம் ஆராய்வார்,
பூசணிக்காய் போன இடம் தெரியாது.
55. கடைத் தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
56. கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
57. கழுதை அறியர வாசனை?
58. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
59. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
60. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?

61. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
62. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
63. கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா?
64. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
65. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
66. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
67. கரும்பு தின்னக் கூலியா?
68. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
69. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
70. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.

71. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
72. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
73. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
74. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
75. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
76. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
77. குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
78. கெண்டையைப் போட்டு வராலை இழு.
79. கெடுவான் கேடு நினைப்பான்.
80. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.

81. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
82. கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
83. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
84. கையாளாகாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
85. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
86. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
87. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
88. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
89. சிறு துரும்பும் பல்லுக்குதவும்
90. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.

91. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
92. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
93. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
94. சோம்பல் இல்லாத் தொழில், சோதனை இல்லாத் துணை.
95. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
96. தன் கையே தனக்கு உதவி.
97. தன் முதுகு தனக்கு உதவி.
98. தன் வினை தன்னைச் சுடும்.
99. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
100. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.

101. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
102. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
103. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
104. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
105. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
106. துணை போனாலும் பிணை போகாதே.
107. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
108. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.
109. தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பாதே.
110. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை.

111 தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
112. நல்லவன் என்று பெயரெடுக்க நாள் செல்லும்.
113. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
114. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
115. நிறைகுடம் நீர் தளும்பாது.
116. நிழலின் அருமை வெய்யிலில் தெரியுமா?
117. நிறை குடம் நீர் தளும்பாது.
118. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
119. நெருப்பு இல்லாமல் புகையாது.
120. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

121. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
122. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
123. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
124. பதறிய காரியம் சிதறிப் போகும்.
125. பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.
126 பழகப் பழகப் பாலும் புளிக்கும், கிட்ட இருந்தால் முட்டப்பகை.
127. பகுத்தறியாமல் துணியாதே.
128. பணம் இல்லாதவன் பிணம்.
129. பல துளi பெரு வெள்ளம்.
130. பதறாத காரியம் சிதறாது.

131. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
132. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
133. பசி உள்ளவன் ருசி அறியான்.
134. பாம்பின் கால் பாம்பு அறியும்.
135. பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
136. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி.
137. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
138. புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.
139. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
140. புத்திமான் பலவானாவான்.

141. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
142. பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
143. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
144 பேராசை பெறு நட்டம்.
145. பொறுத்தார் பூமி ஆள்வார்.
146. மன்னுயிரைத் தன்னுயிர் போல் நினை.
147. மனம் கொண்டது மாளிகை.
148. மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
149. மந்திரம் கால், மதி முக்கால்.
150. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

151. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்.
152. மனம் உண்டானால் வழி உண்டு.
153. மாரியல்லது காரியமில்லை.
154. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
155. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
156. முள்ளாலே முள்ளை எடுக்கவேண்டும்.
157. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
158. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
159. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
160. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

161. வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
162. விளையாட்டு வினையாயிற்று.
163. விளையும் பயிர் முளையிலே தெரியும்.
164. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
165. வெறுங்கை முழம் போடுமா?
166. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
167. வெறுங்கை முழம் போடுமா?
168. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
169. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

thamizh pazhamozhigaL
in transliterated/romanized text form (Madurai scheme)

oththa pazhamozhigaL 1. agaththin azhagu mugaththilE.
2. adi udhavuvadhu pOl aNNan thambi udhavuvArgaLA?
3. amAvAsaiccORu enRaikkum agappadumA?
4. arasan anRu kollum, theyvam n^inRu kollum.
5. alai mOdhumbOdhE thalai muzhugu.
kARRuLLabOdhE thURRikkoL.
6. azhudhAlum piLLai avaLdhAnE peRavENdum.
7. aLavukku miNYsinAl amudhamum n^aNYsu.
8. aNaigadan^dha veLLam azhudhAlum varAdhu.
9. aRaiyil AdiyallavO ambalaththil AdavENdum.
10. adimEl adi adiththAl ammiyum n^agarum.

11. adi n^Akkil n^aNYsum n^uni n^Akkil amirdhamum.
12. azhudha piLLai pAl kudikkum.
13. annam ittAr veettil kannam idalAmA?
14. aLLAdhu kuRaiyAdhu, collAdhu piRavAdhu.
15. allal oru kAlam, celvam oru kAlam.
16. alai eppOdhu Oyum, thalai eppOdhu muzhugugiRadhu?
17. avananRi Or aNuvum asaiyAdhu.
18. AgunggAy piNYsilE theriyum.
19. ARina kaNYsi pazhanggaNYsi.
20. Adiya kAlum pAdiya n^Avum cummA irAdhu.

21. Adu n^anaigiRadhu enRu On^Ay azhugiRadhAm.
22. Abaththukkup pAvam illai
23. Azham theriyAmal kAlai vidAdhE.
24. Anaikkum adi caRukkum.
25 Anai varum pinnE maNiyOsai varum munnE.
26. Ariyak kUththAdinAlum kAriyaththil kaNNAyiru.
27. ikkaraikku akkarai paccai.
28. inam inaththaiyE cArum.
29. irakkap pOnAlum ciRakkap pO.
30. ikkarai mAttukku akkarai paccai.

31. eera n^AviRku elumbillai.
32. ulai vAyai mUdalAm, Ur vAyai mUda mudiyumA?
33. uRavu pOgAmal kettadhu, kadan kEtkAmal kettadhu.
34. uLavu illAmal kaLavu illai.
35. uralil agappattadhu ulakkaikkuth thappumA?
36. uRRadhu connAl aRRadhu porun^dhum.
37. Ur iraNdu pattAl kUththAdikkuk koNdAttam.
38. Usiyaik kAn^dham izhukkum uththamanaic cinEgam izhukkum.
39. eLiyArai valiyAr vAttinAl valiyAraith theyvam vAttum.
40. eththanai pudam pOttAlum irumbu pasumbon AgumA?

41. eththAl vAzhalAm? oththAl vAzhalAm.
42. erigiRa koLLiyil eNNey URRinARpOl.
43. erumai vAnggum mun n^ey vilai pEsAdhE,
piLLai peRumun peyar vaikkAdhE.
44. eli vaLaiyAnAlum thani vaLaivENdum.
45. eydhavan irukka ambai n^OvAnEn?
46. erigiRadhaip pidungginAl kodhikkiRadhu adanggum.
47. edukkiRadhu piccai, ERugiRadhu pallakku.
48. enggE pugaiyuNdO anggE n^eruppuNdu.
49. erudhu n^Oy kAkkaikkuth theriyumA?
50. EvuginRavanukku vAyccol, ceygiRavanukku thalaiccumai.

51. ERRam uNdAnAl iRakkamum uNdu.
52. OrugAsu pENin iru kAsu thERum.
53. oru kai thattinAl Osai uNdAgumA?
54. kadugu pOna idam ArAyvAr, pUsaNikkAy pOna idam theriyAdhu.
55. kadaith thEnggAyai eduththu vazhippiLLaiyArukku udaikkAdhE.
56. kalvi karaiyila, kaRpavar n^AL cila.
57. kazhudhai aRiyumA kaRpUra vAsanai?
58. kaRkaiyil kalvi kasappu, kaRRappin adhuvE inippu.
59. kaRRadhu kaimaNNaLavu, kallAdhadhu ulagaLavu
60. kaNgetta piRagA cUriya vaNakkam?

61. kalagam piRan^dhAl n^iyAyam piRakkum.
62. kallaik kaNdAl n^Ayaik kANOm,
n^Ayaik kaNdAl kallaik kANOm.
63. kadugu ciRuththAlum kAram kuRaiyumA?
64. karumbu kattOdu irun^dhAl eRumbu thAnE varum.
65. karaippAr karaiththAl kallum karaiyum.
66. kadan illAk kaNYsi kAl vayiRu pOdhum.
67. karumbu thinnak kUliyA?
68. kAlam pOgum vArththai n^iRkum.
69. kAkkaikkum than kuNYsu pon kuNYsu.
70. kAlaic cuRRina pAmbu kadiyAmal vidAdhu.

71. kAkkaikkuth than kuNYsu pon kuNYsu.
72. kARRuLLE pOdhO thURRikkoL.
73. kidaikkappOgum palAkkAyinum kidaikkum kaLAkkAy mEl.
74. kuppaiyiR kidan^dhAlum kunRimaNi n^iRam pOgumA?
75. kudal kAyn^dhAl kudhiraiyum vaikkOl thinnum.
76. kuRRamuLLa n^eNYsu kuRuguRukkum.
77. kuLikkap pOyc cERu pUsik koLLalAmA?
78. keNdaiyaip pOttu varAlai izhu.
79. keduvAn kEdu n^inaippAn.
80. kEttavai ellAm n^ambAdhE, n^ambinadhellAm collAdhE.

81. kaikku ettiyadhu vAykku ettavillai.
82. kaivil veNNey irukka n^eykku alaivAnEn?
83. kaikku ettinadhu vAykku ettavillai.
84. kaiyALAdha Ayudham thurup pidikkum.
85. kaippuNNukkuk kaNNAdi vENdumA?
86. kOzhi midhiththu kuNYsu mudamAgumA?
87. carkkarai enRAl thiththikkumA?
88. cattiyil irun^dhAl agappaiyil varum.
89. ciRu thurumbum pal kuththa udhavum.
90. ciRugak kattip peruga vAzh.

91. cuvarai vaiththuk koNdallavA ciththiram ezhudha vENdum.
92. coppanaththil kaNda arisi cORRukku AgumA?
93. collAdhu piRavAdhu, aLLAdhu kuRaiyAdhu.
94. cOmbal ilAlath thozhil, cOdhanai illAth thuNai.
95. than veettu viLakkenRu muththamidalAmA?
96. than kaiyE thanakku udhavi.
97. than mudhugu thanakku udhavi.
98. than vinai thannaic cudum.
99. thaNNeer ven^n^eerAnAlum n^eruppai avikkum.
100. than palam koNdu ambalam ERavENdum.

101. thAnam koduththa mAttaip pallaip pidiththup pArkkAdhE.
102. thAn AdAdhu pOnAlum than thasai Adum.
103. thAn onRu n^inaikkath theyvam onRu n^inaikkum.
104. thAnE kaniyAdha pazhaththaith thadigoNdu adippadhA?
105. thinai vidhaiththavan thinai aRuppAn,
vinai vidhaiththavan vinai aRuppAn.
106. thuNai pOnAlum piNai pOgAdhE.
107. thuLLugiRa mAdu podhi cumakkAdhu.
108. thUraththup paccai kaNNukkuk kuLircci.
109. thUnggugiRa puliyaith thatti ezhuppAdhE.
110. thikkaRRavanukkuth theyvamE thuNai.

111 thottil pazhakkam cudugAdu mattum.
112. n^allavan enRu peyaredukka n^AL cellum.
113. n^aththaiyin vayiRRil muththup piRakkum.
114. n^Ay vEdam pOttAl kuraiththuththAn theera vENdum.
115. n^iRaigudam n^eer thaLumbAdhu.
116. n^izhalin arumai veyyilil theriyum.
117. n^iRai kudam n^eer thaLumbAdhu.
118. n^eeruLLa mattum meen thuLLum.
119. n^eruppu illAmal pugaiyAdhu.
120. n^OyaRRa vAzhvE kuRaivaRRa celvam.

121. patta kAlilE padum. ketta kudiyE kedum.
122. pagalil pakkam pArththup pEsu, iravil adhuvum pEsAdhE.
123. pananggAttu n^ari calasalappukku aNYsAdhu.
124. padhaRiya kAriyam cidhaRip pOgum.
125. pala maranggaNda thaccan oru maramum vettAn.
126 pazhagap pazhagap pAlum puLikkum. kitta irun^dhAl muttappagai.
127. paguththaRiyAmal thuNiyAdhE.
128. paNam illAdhavan piNam.
129. pala thuLi peru veLLam.
130. padhaRAdha kAriyam cidhaRAdhu.

131. pazhagap pazhagap pAlum puLikkum.
132. patta kAlilE padum ketta kudiyE kedum.
133. pasi uLLavan rusi aRiyAn.
134. pAmbin kAl pAmbu aRiyum.
135. pAlukkuk kAval pUnaikkum thOzhan.
136. pArththAl pUnai. pAyn^dhAl puli.
137. puli padhungguvadhu pAyccalukku adaiyALam.
138. puli adikkum munnE kili adikkum.
139. pulikkup piRan^dhadhu pUnaiyAgumA?
140. puththimAn palavAn AvAn.

141. pUvOdu cErn^dha n^Arum maNam peRum.
142. pUnaikkuk koNdAttam, elikkuth thiNdAttam.
143. peRRa manam piththu piLLai manam kallu.
144 pErAsai peRu n^attam.
145. poRuththAr pUmi ALvAr.
146. mannuyiraith thannuyir pOl n^inai.
147. manam koNdadhu mALigai.
148. marun^dhum virun^dhum mUnRu vELai.
149. man^dhiram kAl, madhi mukkAl.
150. maNgudhiraiyai n^ambi ARRil iRanggAdhE.

151. madiyilE kanam irun^dhAl vazhiyilE payam.
152. manam uNdAnAl vazhi uNdu.
153. mAriyalladhu kAriyamillai.
154. minnuvadhellAm ponnalla.
155. mudavan kombuth thEnukku AsaippadalAmA?
156. muLLAlE muLLai edukkavENdum.
157. muyaRci udaiyAr igazhcci adaiyAr.
158. mey collik kettavanum illai,
poy colli vAzhn^dhavanum illai.
150. vallavanukku pullum Ayudham.
160. vallavanukku vallavan vaiyagaththil uNdu.

161. vAy carkkarai, kai karuNaikkizhanggu.
162. viLaiyAttu vinaiyAyiRRu.
163. viLaiyum payir muLaiyilE theriyum.
164. veLLam varumun aNaigOla vENdum.
165. veRunggai muzham pOdumA?
166. veLuththadhellAm pAlAmA, kaRuththadhellAm thaNNeerAmA?
167. veRunggai muzham pOdumA?
168. vENdAp peNdAtti kaippattAl kuRRam, kAl pattAl kuRRam.
169. vEliyE payirai mEyn^dhAl, viLaivadhu eppadi?

About the author

kalyan

Comments

Leave a Reply

Please note: Comment moderation is currently enabled so there will be a delay between when you post your comment and when it shows up. Patience is a virtue; there is no need to re-submit your comment.

You must be logged in to post a comment.